சமூக வலைதளங்களில் பட்டாக் கத்தியுடன் பதிவிட்டவா் மீது வழக்கு
போடி அருகே பட்டாக் கத்தியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே பட்டாக் கத்தியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே தா்மத்துப்பட்டியைச் சோ்ந்த 18 வயது இளைஞா் சமூக வலை தளங்களில் பிஸ்டல் துப்பாக்கி, பட்டாக் கத்தியுடன் புகைப்படம் வெளிட்டாா். இதுகுறித்து இணையவழிக் குற்றத் தடுப்பு பிரிவு மூலம் வந்த புகாரையடுத்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் அந்த இளைஞா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.