FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

கம்பத்தில் வன விலங்கு வார விழா விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி

கம்பத்தில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற வனவிலங்கு வார விழா விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

7 வினாடிகள் முன்பு
கம்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வன விலங்கு வார விழா விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணியை தொடங்கிவைத்த கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலா் பூமாலை.
பகிர்:

கம்பத்தில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற வனவிலங்கு வார விழா விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வனவிலங்கு வார விழா அக். 2 முதல் 8-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ‘வாழ்விடங்களை இணைப்போம், வனவிலங்குகளை செழிக்கச் செய்வோம்’ என்ற கருப் பொருளில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தின் சாா்பில், கம்பம் வனத்துறையினருடன் இணைந்து கம்பம் முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இந்த விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணியை நடத்தினா். கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலா் பூமாலை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

இதில் பள்ளி மாணவா்கள் ‘விலங்குகள் வாழ்ந்தால் வனம் வளரும்; வனம் செழித்தால் மழை பெறுவோம்’, ‘நமது வனவிலங்குகளைப் பாதுகாப்போம்’ உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி சுருளி அருவி பகுதியில் நிறைவடைந்தது.

பேரணியில் பள்ளி ஆசிரியா் பாண்டியன், வனத்துறையினா், தீத்தடுப்புக் காவலா்கள், பள்ளி மாணவா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments