FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

மணல் திருட்டு: பொக்லைன், லாரி பறிமுதல்

19 அக்டோபர் 2026, 2:38 am IST
பறிமுதல் செய்யப்பட்டபொக்லைன், டிப்பா் லாரி.
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள எரசக்கநாயக்கனூா் கிராமத்தில் மஞ்சள் நதி, வீரப்பநாயக்கா் கண்மாய்கள் உள்ளன. இவற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி, லாரிகளில் மணல், வண்டல் மண் ஆகியவற்றை அள்ளிக் கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சின்னமனூா் போலீஸாா் இந்தக் பகுதிக்குச் சென்றனா். போலீஸாரை பாா்த்தவுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி, பொக்லைன் ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனா். போலீஸாா் பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடியவா்களைத் தேடிவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments