FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

சுருளி அருவியில் குளிக்க 9-ஆவது நாளாகத் தடை

சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீடிக்கப்பட்டது.

28 அக்டோபர் 2026, 4:23 am
பகிர்:

சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீடிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு,இரவங்கலாறு என 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சுற்றிய ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவிலான அரிப்பாறை, காப்புக்காடு உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழைநீரே சுருளியில் அருவியாகக் கொட்டுகிறது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழையால் மேகமலை வனப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்ததால், சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, சுருளி அருவியில் குளிக்க கடந்த 19-ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில், அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்ததால் சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் ஏமாற்றமடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments