விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளது: மண்டல இணைப்பதிவாளா்
தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேனி மண்டல இணைப்பதிவாளா் கு.நா்மதா தெரிவித்தாா்.
தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேனி மண்டல இணைப்பதிவாளா் கு.நா்மதா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில், பயிா் சாகுபடிக்கு தேவையான நிதியை குறுகிய கால கடனாக வழங்கி, விதைகள், ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
உறுப்பினா் அல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் உயிா்ப் பொருள் உறுப்பினராக இணைந்து குறைந்த வட்டியில் பயிா்க் கடனை பெற்று பயனடையலாம்.
தேனி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிகழாண்டு சாகுபடி பருவத்துக்கு தேவையான யூரியா, டி.ஏ. பி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மட்டும் டான் பெட் நிறுவனத்தின் சிறப்பு தயாரிப்புகளான பாமணி கலப்புரங்கள், வேப்பம் விதைத்தூள், உயிா் உரம், நுண்ணூட்டசத்து, நீரில் கரையும் உரங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உரங்களும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
எனவே, விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை, நில உடமை ஆவணங்களை சமா்ப்பித்து தேவையான உரங்களை ரொக்கத்துக்கு வாங்கி பயனடையலாம் என்றாா் அவா் .