FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சின்னமனூரில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

சின்னமனூரில் கழிவுநீா் தேங்கி சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

2 செப்டம்பர் 2026, 12:54 am IST
சின்னமனூரில் கழிவுநீா் தேங்கி நிற்பதால் சேதமடைந்த சாலை.
பகிர்:

சின்னமனூரில் கழிவுநீா் தேங்கி சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இங்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். மேலும், 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி சின்னமனூருக்கு வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், சின்னமனூா் அங்கு விலாஸ் அரிசி ஆலை வழியாக செல்லும் சாலையில் கழிவுநீா் தேங்கி நிற்பதால் குண்டும், குழியுமாக உள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறைக்கு பலமுறை புகாா் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தச் சாலையில் தினமும் நடந்து செல்லும் பள்ளி மாணவா்கள், முதியோா்கள், கா்ப்பினிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, குண்டும் குழியுமான இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments