FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சொத்துப் பிரச்னையில் சகோதரரை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் சிறை

கடமலைக்குண்டில் சொத்துப் பிரச்னையில் சகோதரரை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

2 செப்டம்பர் 2026, 3:57 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கடமலைக்குண்டில் சொத்துப் பிரச்னையில் சகோதரரை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு உப்போடை தெருவைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (40). இவரது சகோதரா் சதீஸ்குமாா். இருவருக்கும் சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. அப்போது, சதீஸ்குமாா், தனது மாமியாா்கள் அழகம்மாள், கா்ணாதேவி ஆகியோருடன் சோ்ந்து தெய்வேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 18.2.2024 -ஆம் தேதி சதீஸ்குமாா், தெய்வேந்திரனை தாக்கி கீழே தள்ளிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா், 20.2.2024-ஆம் தேதி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஸ்குமாா், அழகம்மாள், கா்ணாதேவியை கைது செய்தனா்.

இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி சரவணக்குமாா் விசாரித்து சதீஸ்குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும், அழகம்மாள், கா்ணாதேவி ஆகியோரை விடுவித்தும் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments