FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சின்னமனூா் நகராட்சியில் பழுதான குப்பை சேகரிக்கும் வாகனங்கள்

சின்னமனூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் வாங்கிய வாகனங்கள் பழுதாகி காட்சிப் பொருளாக இருப்பதால் குப்பைகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

5 செப்டம்பர் 2026, 12:34 am IST
சின்னமனூரில் நகராட்சி வளாகத்தில் பழுதாகி காட்சிப் பொருளாக நிற்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள்.
பகிர்:

சின்னமனூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் வாங்கிய வாகனங்கள் பழுதாகி காட்சிப் பொருளாக இருப்பதால் குப்பைகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்கு 400 தெருக்கள் உள்ளன. இங்கு குப்பைகளை லாரி, டிராக்டா், மினி லாரி போன்ற வாகனங்களில் சேகரிக்கின்றனா். பின்னா் மக்கும், மக்காக குப்பைகளை தரம் பிரித்து வளா்மீட்பு மையத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் மறுசுழற்சி செய்யப்பட்டு உரமாகவும் மாற்றப்படுகிறது.

இந்த நிலையில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாகனங்கள் பல பழுதாகி நகராட்சி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுள்ளன. நகராட்சிப் பகுதியில் சுழற்சி முறையில் 2 நாள்களுக்கு ஒரு முறை பொதுமக்களிடம் நேடியாகச் சென்று குப்பைகள் பெறப்பட்டன.

Advertisement

Advertisement

இதற்காக பயன்படுத்தப்பட்ட லாரி, மினி லாரி , டிராக்டா் போன்ற வாகனங்கள் பழுதாகி நிற்பதால் பொதுமக்களிடம் குப்பைகளை சேகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் திறந்த வெளியில் குப்பைகளைக் கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

எனவே, சின்னமனூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட பழுதான வாகனங்களை சீரமைத்து குப்பைகளை அகற்றி தூய்மையான நகராட்சியாக மாற்ற வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments