போடியில் மிதமான மழை!
போடியில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
போடியில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
போடி பகுதியில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், போடி பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சியான சூழல் நிலவி வருகிறது. போடி நகரின் முக்கிய நீா் ஆதாரமான கொட்டகுடி ஆறு வடு காணப்படுகிறது. கொட்டகுடி, குரங்கணி மலை கிராமங்களிலும் மழை இல்லாததால், கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போடி நகரில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
இந்த நிலையில், போடி பகுதியில் வெள்ளிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், மாலையில் மிதமான மழை பெய்தது. மலைப் பகுதியிலும் பரவலான சாரல் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.