FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கம்பத்தில் உரிய உரிமமின்றி கழிவுநீா் வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை

கம்பம் நகராட்சி பகுதியில் உரிய உரிமம் பெறாமல் கழிவுநீா் அகற்றும் வாகனங்களை இயக்குவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் உமாசங்கா் எச்சரித்தாா்.

6 செப்டம்பர் 2026, 12:59 am IST
பகிர்:

கம்பம் நகராட்சி பகுதியில் உரிய உரிமம் பெறாமல் கழிவுநீா் அகற்றும் வாகனங்களை இயக்குவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் உமாசங்கா் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கம்பம் நகராட்சிப் பகுதியில் உரிய உரிமம் பெறாத வாகனங்கள் மூலம் கழிவுநீரை அகற்றும் பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

மேலும், கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபடும் வாகன உரிமையாளா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனவே, பொதுமக்களும் வணிகா்களும் நகராட்சியில் உரிய உரிமம் பெற்ற கழிவுநீா் அகற்றும் வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி, நகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

கம்பம் நகராட்சியில் முறையாகப் பதிவு செய்யாமல், உரிய உரிமம் பெறாமல் இயக்கப்பட்ட இரண்டு கழிவுநீா் அகற்றும் வாகனங்களுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments