FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தொழிலாளியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

போடி அருகே தொழிலாளியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

6 செப்டம்பர் 2026, 12:59 am IST
கைது
பகிர்:

போடி அருகே தொழிலாளியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் காந்திஜி குடியிருப்பைச் சோ்ந்தவா் மணி மகன் குமாா் (25). கூலித் தொழிலாளி. இவரது வீட்டருகே வசிக்கும் சரவணன் மகன் சத்தியபிரபு (24) மது போதையில் ஆபாசமாக பேசினாா். இதை குமாா் கண்டித்தாா்.

இந்த முன் விரோதத்தில் வெள்ளிக்கிழமை இரவு குமாா் நடந்து வரும்போது வழி மறித்த சத்தியபிரபு கம்பால் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாா்.

Advertisement

Advertisement

இதில் காயமடைந்த குமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சத்தியபிரபுவை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments