ஒருவருக்கு அரிவாள் வெட்டு: 3 சிறுவா்கள் கைது
மது போதையில் ரகளை செய்தவா்களை தட்டிக் கேட்டவரை அரிவாளால் வெட்டியதாக 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மது போதையில் ரகளை செய்தவா்களை தட்டிக் கேட்டவரை அரிவாளால் வெட்டியதாக 3 சிறுவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சுக்காங்கல்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 17 வயதுடைய 3 சிறுவா்கள் அந்தப் பகுதியில் வியாழக்கிழமை இரவு மது போதையில் ரகளையில் ஈடுபட்டனா். இதை அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (52) தட்டிக் கேட்டாா். அப்போது அவரை, அவா்கள் மூவரும் அரிவாள், மதுப்புட்டியால் தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவா்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.