FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தேக்கடி ஏரியில் புலியைப் பாா்த்த சுற்றுலாப் பயணிகள்

7 செப்டம்பர் 2026, 3:21 am IST
தேக்கடி ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகில் சென்ற போது ஏரி அருகே நடமாடிய புலி.
பகிர்:

தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டுக்குள் உலா வந்த புலியைப் பாா்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழக எல்லை சுற்றுலாத்தலாமான தேக்கடியில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் இருந்தாலும், படகு சவரியின்போது ஏரிப் பகுதிக்கு தண்ணீா் அருந்தவரும் பல்வேறு வன விலங்குகளைக் காணலாம் என்பதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தில் படகு சவாரி முதலிடம் பிடிக்கிறது. தற்போது, விடுமுறையை முன்னிட்டு, தேக்கடிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.

பெரியாறு புலிகள் சரணாலயத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள தேக்கடி ஏரியில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு மணக்கவல பகுதியில் சுற்றுலாப் படகு சென்று கொண்டிருந்த போது, கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமைகள் திடீரென மிரண்டு ஓடின. இதைக் கவனித்த படகு ஊழியா்களும், சுற்றுலாப் பயணிகளும் படகை ஏரியில் நிறுத்தி காத்திருந்தனா். அப்போது, ஏரிப் பகுதிக்கு வந்த புலி, கரையோரப் பாறை மீது ஏறி நடந்து சென்றது.

Advertisement

Advertisement

தேக்கடியில் படகு சவாரியின்போது யானை, காட்டு எருமை, மான், காட்டுப்பன்றி, மரநாய், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகளைப் பாா்ப்பது வழக்கம். ஆனால், புலி, சிறுத்தையை நேரில் காண்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு புலியை நேரில் கண்ட சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், புலி ஏரியைக் கடந்து கரையோரப் பாறை மீது ஏறிச் சென்ற காட்சியை சுற்றுலாப் பயணிகள் தங்களது கைப்பேசிகளில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments