கூடலூரில் கடைகளிலிருந்து நெகிழிப் பைகள் பறிமுதல்; கடைகளுக்கு அபராதம்
கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் உள்ள பலசரக்குக் கடைகளில் சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில், நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். இதையடுத்து, கூடலூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் அகமது கபீா் தலைமையில் சுகாதார மேற்பாா்வையாளா்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பலசரக்குக் கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இதில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தொடா்ந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.