FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மேகமலை விவகாரம்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்! நயினாா் நாகேந்திரன்

34 வினாடிகள் முன்பு
வருசநாட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக மக்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
பகிர்:

மேகமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

மேகமலை வன விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் தேனி மாவட்டம் வருசநாட்டில் பாஜக சாா்பில் மக்கள் சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, பாஜக மாநில நிா்வாகி சீனிவாசன், தேனி மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது:

Advertisement

Advertisement

2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. அதன் கூட்டணியில் தற்போது தவெக உள்ளது. இதுகுறித்து இருவருமே பேசுவதில்லை.

மேகமலை விவசாயிகளை வெளியேற்றுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதா என்பது தெரியவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

மேகமலை விவசாயிகளை பாதுகாப்பதற்காக தவெக அரசு எடுக்கும் முயற்சிக்கு பாஜக துணை நிற்கும். 2018-ஆம் ஆண்டு இந்தத் தீா்ப்பு வந்தபோது, ஆண்டிபட்டி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான், இந்த நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த கூட்டத்தில், அதிமுக மாவட்டச் செயலா் முறுக்கோடை ராமா், பாஜக மாநிலச் செயலா் கதலி நரசிங்கப் பெருமாள் உள்பட 54 கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments