நீதிமன்றத்தில் தப்பியோடிய கைதி மதுரையில் கைது
தேனி நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக காத்திருந்த போது தப்பியோடிய கைதியை மதுரை கொடிமங்கலத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக காத்திருந்த போது தப்பியோடிய கைதியை மதுரை கொடிமங்கலத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (24). கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்தாா். பின்னா், நீதிமன்ற விசாரணைக்கு அவா் வரவில்லை.
இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, செவ்வாய்க்கிழமை தேனி நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக காத்திருந்த போது தப்பியோடிவிட்டாா். இந்த நிலையில், இவரைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆண்டிபட்டி காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் மதுரை கொடிமங்கலம் அருகேயுள்ள புதூா் பகுதியில் பதுங்கியிருந்த காத்திக்கை வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.