FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணைத் தாக்கியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணைத் தாக்கியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணைத் தாக்கியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
   ஸ்ரீவில்லிபுத்தூர், ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் யேசுதாஸ் மனைவி பாக்கியவதி (42) க்கும் இதே இடத்தைச் சேர்ந்த கு.கிருஷ்ணன் முத்தாலத் (67) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை கிருஷ்ணன் முத்தாலத்தும் அவரது மனைவி வனரோஜாவும் பாக்கியவதியின் வீட்டிற்குச் சென்று, அவரை ஆபாசமாகப் பேசி, கம்பால் அடித்துக் காயப்படுத்தினார்களாம்.  இது குறித்து பாக்கியவதி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணன் முத்தாலத்தைக் கைது செய்தனர். வனரோஜாவை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments