FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சமுதாயக் கூட கட்டுமான பணி தடையின்றி  நடைபெறக் கோரி ஆட்சியரிடம் மனு

சிவகாசி அருகே என். லெட்சுமியாபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் கட்டப்படும் சமுதாய கூட கட்டுமான பணிகள் தொடர்ந்து

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

சிவகாசி அருகே என். லெட்சுமியாபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் கட்டப்படும் சமுதாய கூட கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
    அந்த மனுவில் கூறியிருப்பதாவது,  சிவகாசி அருகே நாராணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் என். லெட்சுமியா புரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள 90 சதவீதம் பேர் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு ஆலைகளில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், எங்கள் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு புறம்போக்கு நிலத்தில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது, பணிகள் 70 தசவீதம் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், நாராணபுரத்தை சேர்ந்த சிலர், இந்த இடம் தங்களுடையது என பிர  ச்னை செய்து வருகின்றனர். மேலும், ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல், சமுதாய கூடம் கட்டுமான பணியை தடுக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சமுதாய கூட கட்டுமான பணிகளை தொடர்ந்து நடைபெறவும், பாதுகாப்பு வழங்கிடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments