FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஸ்ரீவிலி. பகுதியில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்லூரிகளில்  புதன்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்லூரிகளில்  புதன்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றவிழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆ.முத்துசாரதா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பாக பங்கேற்ற பாலமாரீஸ்வரி, முனியசாமி, வளர்மதி, பாலையா ஆகியோருக்கு நீதிபதி பரிசு வழங்கிப் பேசினார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அமர்வு நீதிபதி லியாகத் அலி, மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சம்பத்குமார், விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் பரமசிவம், சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் நீதிபதி ஜெ.கிறிஸ்டல் பபிதா, சார்பு நீதிபதி கதிரவன், உரிமையியல் நீதிபதி இன்பகார்த்திக், நீதித்துறை நடுவர் எண் 2 ஆனந்தி மற்றும் வழக்குரைஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 முன்னதாக இளநிலை உதவியாளர் சுந்தர்ராஜ் வரவேற்றார். மாவட்ட நீதிமன்ற நிர்வாக உதவியாளர் எஸ்.பால்ராஜ் நன்றி கூறினார்.
 ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சுதந்திர தின விழா வட்டாரக் கல்வி அலுவலர் 2 கோ.விஜயலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் 1 கி.சீனிவாசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆசிரியர்களிடையே, சுதந்திர இந்தியாவில் இன்றைய ஆசிரியர்களின் பொறுப்புகளும் கடமைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
பள்ளி, கல்லூரிகளில்... வத்திராயிருப்பு, ரெங்காராவ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தாளாளர் த.ஆரியன்மதுரம் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவரும் ஓய்வு பெற்ற அரசு மருத்துவருமான க.பால்ச்சாமி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சர்வ சமய வழிபாடு நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகி கூடலிங்கம்,  க.முருகன், சு.விஜயகுமார், வி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நிர்வாக அலுவலர் கே.மாரியப்பன் வரவேற்றார். முதல்வர் ஜி.ரஷிலா தவமணி நன்றி கூறினார்.
மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி: இப்பள்ளியில், சுதந்திர தின விழா தாளாளர் ஜி.எஸ்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை தாமரைச்செல்வி வரவேற்றார். முதல்வர் எம்.ராணி தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.
ஒயிட் ஃபீல்டு: ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி: இப்பள்ளியில், மல்லி அன்னை சாரதா அறக்கட்டளை நிர்வாகியும், பள்ளித் தாளாளருமான எல்.ராஜாராம் முன்னிலையில் முதல்வர் பி.வனிதா தேசியக் கொடியை ஏற்றினார்.
சத்யா வித்யாலயா: பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா தாளாளர் 
செ.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் ப.முருகதாசன், துணை முதல்வர் சு.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெட்டியபட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் சபரீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
 ஆங்கில ஆசிரியை இந்திரா ரபீந்திரன் சிறப்புரையாற்றினார். மாணவர் தமிழரசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி ப.அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ரா.அலுசோடை நன்றி கூறினார்.
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக் கழகம்: இங்கு துணைத் தலைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் ச.சரவணசங்கர், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். தேசிய மாணவர் படையில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தனிச் சிறப்பு வில்லை அணிவிக்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் பதிவாளர் வெ.வாசுதேவன், நிதிக் காப்பாளர்கள் இளமாறன், தர்மராஜ், பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் பிளஸி, செல்வகணேஷ் செய்திருந்தனர்.
வி.பி.எம்.எம்.: கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனம்: இங்கு கல்வி நிறுவனத் தலைவர் வி.பி.எம்.சங்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில் தாளாளர் பழனிச்செல்வி, துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குநர்  ரா.சபரிமாலா வரவேற்றார். ஸ்ரீவில்லிபுத்தூர், அரசு மருத்துவமனை மருத்துவர் ஏ.சாரா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். 
நிகழ்ச்சியில் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில்...
விருதுநகர் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் புதன்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
 விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் ஏற்றி வைத்தார். விருதுநகர் நகராட்சியில் ஆணையர் சந்திரசேகரன், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன், விருதுநகர் ரயில் நிலையத்தில் மேலாளர் சிவகுருநாதன், விருதுநகர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சீனிவாசன், மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி பரிமளா ஆகியோர் தேசியக் கொடி ஏற்றினர். 
 அதேபோல், பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பள்ளிச் செயலர் ஜெரால்டு ஞானரத்தினம் தேசியக் கொடி ஏற்றினார். இதில் பள்ளி முதல்வர் வெர்ஜின் இனிகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுரை வருமான வரித்துறை துணை ஆணையர் கலைச்செல்வி தேசியக் கொடி ஏற்றினார். 
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். முத்துக்குமாரபுரம் தெலுங்கு செட்டியார் இந்து நடுநிலைப் பள்ளியில் பள்ளிச் செயலர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆன்மிகவாதி டி. பரமசிவம் தேசியக் கொடி ஏற்றினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ரமணிபாய் நன்றி கூறினார். 
ஷத்திரிய வித்யாலயா மேனேஜிங் போர்டுக்கு பாத்தியப்பட்ட பள்ளிகளில் சுதந்திர தின விழா பள்ளிச் செயலர் பி. மதன்மோகன் தலைமையில் நடைபெற்றது. அதில், கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளித் தலைவர் லெனின் தேசியக் கொடி ஏற்றினார். இதில் நிர்வாகி உமாபதி, தலைமை ஆசிரியர் சந்திரமோகன் ஆகியோர் பங்கேற்றனர். கே.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில் பாண்டியரா ஜன் தலைமையில் பள்ளிச் செயலர் பி.மதன்மோகன் தேசியக் கொடி ஏற்றினார். திருவள்ளுவர் வித்யாலயா நடுநிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகி முத்துவேல் தேசியக் கொடி ஏற்றினார்.  பள்ளி தலைமை ஆசிரியர் தனசேகரன் பங்கேற்றார். கே.காமராஜ் வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில் பள்ளி பொருளாளர் இன்பசேகரன் தேசியக் கொடியேற்றினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜவேல் பங்கேற்றார். சுப்பிரமணிய வித்யாலயா ஆரம்பப் பள்ளியில், பள்ளி நிர்வாகி ஜெயப்பிரகாசம், சரஸ்வதி வித்யாலயா ஆரம்பப் பள்ளியில் பள்ளி நிர்வாகி செந்தில் சுப்பிரமணியன், கி.பெ. பெரியகருப்பநாடார் ஆரம்பப் பள்ளியில் பள்ளி நிர்வாகி அரசன் கணேஷ்குமார், ஷத்திரிய வித்தியாலயா நூற்றாண்டுப் பள்ளியில் பள்ளி நிர்வாகி சண்முகப்பிரியா ஆகியோர் தேசியக் கொடி ஏற்றி வைத்தனர். இதில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 அதேபோல், விவி வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரியில், கல்லூரி உபதலைவர் தெய்வஜோதி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இதில் கல்லூரி தலைவர் மாணிக்கவாசகம், செயலர் ரத்தினவேல், கூட்டு செயலர் மைதிலி மாணிக்கவாசகம்,  கல்லூரி முதல்வர் மீனாராணி ஆகியோர் பங்கேற்றனர். விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் கல்லூரி செயலர் ஜே. சரவணன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இதில், கல்லூரித் தலைவர் குமரன், உபதலைவர் ஆனந்தராஜன், பொருளாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 அதேபோல், ஸ்ரீவித்யா கல்வி குழுமத்தில் தலைவர் திருவேங்கட ராமானுஜதாஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments