FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம்

அருப்புக்கோட்டை போக்குவரத்துக் காவல்துறை சார்பில் ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

அருப்புக்கோட்டை போக்குவரத்துக் காவல்துறை சார்பில் ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. 
 இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் பந்தல்குடி காவல் துணை ஆய்வாளர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 அப்போது காவல் ஆய்வாளர் முருகன் பேசியதாவது: போக்குவரத்து விதிமுறைகளின் படியும், சாலைப் பாதுகாப்பு நடைமுறைகளின்படியும் மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும். 
ஓட்டுநர் உரிமம் பெறுதல், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது  தலைக்கவசம் அணிதல், கார்களில் பயணிக்கும் போது பெல்ட் அணிதல் உள்ளிட்ட அனைத்தையும் சரியாகக் கடைபிடித்தால் விபத்துகளைப் பெருமளவு குறைக்க இயலும் என்றார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments