FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுபானக் கடை ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது

சிவகாசியில் வியாழக்கிழமை மதுபானக் கடை ஊழியரிடம் வழிப்பறி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

சிவகாசியில் வியாழக்கிழமை மதுபானக் கடை ஊழியரிடம் வழிப்பறி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
   திருத்தங்கல் அருகே சுக்கிரவார்பட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி(42). இவர் சிவகாசி-செங்கமலப்பட்டி சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் சிவகாசி-செங்கமலப்பட்டி சாலையில் உள்ள திரையரங்கம் அருகே நடந்து சென்றபோது, மர்மநபர் கத்தியை காட்டி மிரட்டி, அவரது பையில் வைத்திருந்த ரூ.310-ஐ பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியோடு வழிப்பறி செய்தவரைப் பிடித்து தங்கப்பாண்டி போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி(32) என்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments