FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விருதுநகர் அருகே சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம்

விருதுநகர் அருகே மீசலூர் விலக்கில் உள்ள சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

விருதுநகர் அருகே மீசலூர் விலக்கில் உள்ள சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. 
 விருதுநகர் அருகே மீசலூர் விலக்கு செல்லும் பாதையில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் ஷீரடி சாய்பாபாவின் 100 ஆம் ஆண்டு ஜீவ சமாதி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.   இதை முன்னிட்டு, புதன்கிழமை மாலை முதல் சாய்பாபா கோயிலில் கணபதி பூஜை, லட்சுமி பூஜை, ஷீரடி சாய்பாபா கலச ஸ்தாபிதம், வேத பாராயணம் மற்றும் முதல் கால ஹோமங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு 108 சங்கு பூஜை, கலச பூஜை, பஞ்ச கீத பாராயணங்கள் நடைபெற்றது. இதை தொடர்ந்து துவாரகமாயி, கோபுரம் ஆகியவற்றில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடந்து ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments