FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காவலர் பணியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு மீண்டும் பணி வாங்கித் தருவதாக மோசடி

ராஜபாளையம் அருகே காவலர் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீஸார்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

ராஜபாளையம் அருகே காவலர் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
   ராஜபாளையம் அருகே உள்ள  சொக்கநாதன்புத்தூர், வடகாசி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (32). இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சிக்காக சென்னை சென்றார். ஆனால் பயிற்சியை முடிக்காமல் பாதியிலே வந்துவிட்டார். இதையடுத்து அவரை காவல்துறை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் கிடைத்த பணியை இழந்துவிட்டோம் என்ற ஏக்கத்தில் இருந்த இசக்கிமுத்துவிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டி, மீண்டும் காவலர் பணி வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய இசக்கிமுத்து, இரண்டு தவணைகளில் ரூ.3 லட்சத்தை கருத்தப்பாண்டியனிடம் கொடுத்தாராம்.  அதன்பின்னர் கருத்தப்பாண்டி வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும்  பணத்தை திருப்பி கேட்ட போது தரக்குறைவாக திட்டியதாகவும் இசக்கிமுத்து தென் மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் சேத்தூர் போலீஸார், கருத்தபாண்டி மீது வழக்குப்பதிந்து விசரிரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments