தச்சுப் பட்டறையிலிருந்த பணம், பொருள்கள் திருட்டு
ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தச்சுப் பட்டறையிலிருந்த பணம் மற்றும் பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தச்சுப் பட்டறையிலிருந்த பணம் மற்றும் பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் ஈ.எஸ்.ஐ. காலனி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (50). தெற்கு அழகை நகரில் தச்சு பட்டறை நடத்தி வரும், இவர் செவ்வாய்க்கிழமை தனது பட்டறையில் வேலையை முடித்து விட்டு ரூ.50ஆயிரம் பணத்தை அங்குள்ள பீரோவில் வைத்து பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பணம் மற்றும் இரண்டு டி.வி.டி. பிளேயர்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. பின்னர் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மாரியப்பன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.