பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இருவர் மீது வழக்கு
ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம், மாடசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிலோமீனா (74). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவரது தங்க சங்கிலி காணாமல் போனது குறித்து அருகில் வசித்த அன்னபாக்கியம் என்பவரிடம் செவ்வாய்க்கிழமை கேட்டாராம். அப்போது, அவரும் அவரது கணவர் தங்கதுரை என்பவரும் சேர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பிலோமீனா தளவாய்புரம் போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் அன்னபாக்கியம், தங்கதுரை மீது வழக்கு ப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.