FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விருதுநகர் மாவட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்: 87 கிராம அஞ்சலகங்கள் மூடல்

விருதுநகர் மாவட்டத்தில் கிராம அஞ்சலக ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தால் புதன்கிழமை 87 கிராமப்புற அஞ்சலகங்கள் திறக்கப்பட வில்லை.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் கிராம அஞ்சலக ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தால் புதன்கிழமை 87 கிராமப்புற அஞ்சலகங்கள் திறக்கப்பட வில்லை.
கிராமப்புற அஞ்சலக ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி, இச்சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். 
அதன் அடிப்படையில் புதன்கிழமை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற அஞ்சலகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 281 அஞ்சலகங்களில் 87 கிராமப்புற அஞ்சலகங்கள் திறக்கப்பட வில்லை.
 கிராமப்புற அஞ்சலகங்களில் பணி புரியும் 475 ஊழியர்களில் 225 பேர் பணிக்கு வரவில்லை. இதனால், கிராமப் பகுதிகளில் அஞ்சல் அனுப்புவது, பணப்பட்டுவாடா உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments