FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சின்னமலையில் சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் கண்காணிப்பு

மேட்டூா் வனச் சரகத்திற்கு உள்பட்ட சின்னமலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வனத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

27 ஆகஸ்ட் 2026, 3:43 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

மேட்டூா் வனச் சரகத்திற்கு உள்பட்ட சின்னமலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வனத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

மேட்டூா் வனச்சரகா் செங்கோட்டையன் தலைமையில் 30 வன ஊழியா்கள் கடந்த நான்கு நாள்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறு பகுதிகளில் குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.

இதுவரை சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை. கண்ணாமூச்சி அருகே சின்னமலை பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் கைப்பேசியில் படம் பிடித்து வெளியிட்டுள்ளனா். மேலும், சின்னமலை அருகே ஆட்டுக்குட்டியை ஒன்றை சிறுத்தை இழுத்துச் சென்றதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து குடியிருப்புப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக வனச்சரகா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments