FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சாத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் நிரந்தர கட்டடத்துக்கு மாற்றப்படுமா?

சாத்தூரில் அடிப்படை வசதி இல்லாமல் வாடகை இடத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 7 ஜூன் 2018, 7:09 am IST
பகிர்:

சாத்தூரில் அடிப்படை வசதி இல்லாமல் வாடகை இடத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 சாத்தூர் - விருதுநகர் சாலையில் சூலக்கரையில் தொழிற்பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. அதனை மையமாக கொண்டு சாத்தூர் பகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க வேண்டும் என இப்பகுதி மாணவ, மாணவிகள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தனர்.
 இந்நிலையில், சாத்தூரில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால், சாத்தூர் பகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அவசர கதியில் தொடங்கப்பட்டு, காமராஜபுரத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
 அரசு தொழிற்பயிற்சி நிலையம் என்பதால் சாத்தூர் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் இங்கு சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால், இந்த தொழிற்பயிற்சி நிலையம் வாடகை  கட்டடத்தில் இயங்கி வருவதால் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இல்லை. குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற எவ்வித  அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால், பாதிக்கப்படும் மாணவ, மாணவிகள் கல்வியிலிருந்து இடைநிற்றல் ஏற்படுவதாக பொற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சாத்தூரில் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு அனைத்து வசதிகளுடன் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மாணவ, மாணவிகள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் கூறியதாவது:
 தொழிற் பயிற்சி நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், பயிற்சி நிலையத்தின் ஆவணங்களை கூட பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. தற்போது, தொழிற்பயிற்சி நிலையத்துக்கு இடம் தேர்வுசெய்யும் பணி நடைபெறுவதாகவும், புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments