FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே இடிந்து விழும் நிலையில் கல் மண்டபம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள கல் மண்டபத்தை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 7 ஜூன் 2018, 7:10 am IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள கல் மண்டபத்தை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் தெரு வழியாக அத்திக்குளம் செல்லும் சாலையில் ரயில்வே கேட் அருகே அத்திகுளம்-தெய்வேந்திரி ஊராட்சி மன்றக் கட்டடம் உள்ளது. 
 இதையொட்டி, இடிந்து விழும் நிலையில் ஒரு கல் மண்டபம் உள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் சிறுவர்கள் இந்த மண்டபத்தில் விளையாடுவதும், பெரியவர்கள் இங்கு அமர்ந்து ஓய்வெடுப்பதுமாக உள்ளனர்.
 இந்நிலையில், பராமரிப்பின்றி உள்ள கல்மண்டபம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், சிறுவர்கள் விளையாடும் போதோ அல்லது பெரியவர்கள் அமர்ந்திருக்கும்போதோ இடிந்து விழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த கல் மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments