பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க தமாகா வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வர் முன் வர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வர் முன் வர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேதமடைந்த சாலைகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் திங்கள்கிழமை அக்கட்சினர் வழங்கினர். அதன் பின்னர், செய்தியாளர்ளிடம் யுவராஜா கூறியது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காரணத்தால் உள்ளாட்சி நிர்வாகம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக கிராம ஊராட்சி முதல் மாநகராட்சி வரை வளர்ச்சி பணிகள் தடைபட்டுள்ளன. மேலும், மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சிக்கு வர வேண்டிய ரூ.6000 கோடி நிதியை பெற முடியாத நிலை உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலை நம்பி 8 லட்சம் தொழலாளர்கள் உள்ளனர். எனவே, பட்டாசுக்கான சுற்றுச்சுழல் அனுமதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். சேலம் எட்டு வழிச் சாலைக்கு அக்கறை காட்டும் தமிழக முதல்வர், பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க அக்கறை காட்ட வேண்டும். கார்பரேட் நிறுவனங்களை திருப்திப்படுத்தவே சேலம்- சென்னை எட்டு வழி சாலை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதனால், விவசாயிகள் ஏழை எளிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் ஒரு சில திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பிரச்னையை உருவாக்கும் விதத்தில் மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர். அவற்றை அவர்கள் தவிர்த்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசும், கருத்து சொல்லும் அனைவரையும் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார் அவர். அப்போது அக்கட்சியின் மாநில செயலாளர் பாலசுப்பிர மணியன், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜபாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.