FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

விருதுநகர் புல்லலக்கோட்டை  சாலையை சீரமைக்கக் கோரிக்கை

விருதுநகர், புல்லலக்கோட்டை சாலை சீரமைப்பை விரைந்து முடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை நகராட்சி ஆணையாளர் (பொ) ரமேஷிடம் மனு அளித்தனர்.

Updated On : 29 ஜூன் 2018, 5:25 am IST
பகிர்:

விருதுநகர், புல்லலக்கோட்டை சாலை சீரமைப்பை விரைந்து முடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை நகராட்சி ஆணையாளர் (பொ) ரமேஷிடம் மனு அளித்தனர்.
 அந்த மனுவில் கூறியிருப்பதாவது,  விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புல்லலக்கோட்டை சாலை உள்ளது. இச்சாலையானது சேதமடைந்ததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், பொது மக்கள்,  மாணவ, மாணவிகள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்நிலையில், இச்சாலையை புதுப்பிக்க நகராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் தார்ச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட வில்லை. இதனால், அப்பகுதியில் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வது முற்றிலும் தடைபட்டுள்ளது. எனவே, உடனடியாக புல்லலக்கோட்டை சாலையில் புதிய தார் சாலையைத் தரமாக அமைத்து தர வேண்டும். மேலும், சாலையின் மேற்கு பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை, விருதுநகர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ரமேசிடம் அளித்தனர். அவர், உடனடியாக பொறியியல் பிரிவு அதிகாரிகள் மூலம் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்துவதாக உறுதியளித்தார். அப்போது, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், நகர்ச் செயலாளர் முருகன், நகர்குழு உறுப்பினர் கே.ஜெயக்குமார் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments