அருப்புக்கோட்டையில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு
அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலையில் குடியிருப்பு பகுதியில் அகற்றப்படாமல் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலையில் குடியிருப்பு பகுதியில் அகற்றப்படாமல் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலையில் மரக்கடை பேருந்து நிறுத்தத்துக்கும், மீனாட்சி சொக்கநாதர் கோயில் பேருந்து நிறுத்தத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் கோயிலுக்கு சொந்தமான காலியிடம் உள்ளது.
இந்த இடம் வேலி அமைக்கப்படாமல் திறந்தவெளியாக இருப்பதால் இங்கு பலரும் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். மேலும், கட்டுமானக் கழிவுகளும் இந்த இடத்தில் கொட்டப்படுகின்றன.
நீண்ட நாள்களாக இந்த குப்பைகள், கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன.
தற்போது, இந்த இடத்தை திறந்த வெளிக் கழிப்பிடமாகவும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த இடத்தின் அருகில், மருத்துவமனை, பள்ளிகள் உள்ளன. இப்பகுதி குடியிருப்புவாசிகள், கோயில் நிர்வாகத்தினர் குப்பைகளை அகற்றக் கோரி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இனியாவது குப்பைகளை அகற்றி, சுகாதாரத்தை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.