சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் கயர்குத்து விழா
சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவில் புதன்கிழமை கயர் குத்து விழா நடைபெற்றது.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவில் புதன்கிழமை கயர் குத்து விழா நடைபெற்றது.
இக்கோயில் சித்திரைபொங்கல் விழா மே 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
6ஆம் நாள் விழாவில் வெள்ளி தாமரையில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. 8 ஆம் நாள் விழா பொங்கல் விழாவாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் கோயிலின் முன் பொங்கலிட்டு வழிபட்டனர். 9 ஆம் நாளான புதன்கிழமை கயர் குத்து விழா நடைபெற்றது.
இதையொட்டி பக்தர்கள் அக்கினிசட்டி ஏந்தி, அலகு குத்தி, ஆயிரங்கண் பானையை வைத்து வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவையொட்டி, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்கினர். பாம்பாட்டி சித்தர் கோயில் உள்ளிட்ட ஆன்மிக சங்கங்களின் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. மேலும் தர்பூசணிப்பழம், பானக்காரம், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.