FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வீட்டில் மதுபானம் விற்றவர் கைது

சாத்தூர் அருகே வீட்டில் மதுபானம் விற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

சாத்தூர் அருகே வீட்டில் மதுபானம் விற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
சாத்தூர் அருகே மேட்டமலையில் உள்ள ஒரு வீட்டில் மதுபானம் பதுக்கி விற்கப்படுவதாக சாத்தூர் நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். 
இதில், போஸ் (33) என்பவர் வீட்டில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 124 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து, போஸை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments