FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சர்வர் பிரச்னையால் இ-சேவை மையங்கள் முடக்கம்: விருதுநகரில் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு இ- சேவை மையங்களில் சர்வர் பிரச்னை காரணமாக சான்றிதழ் வழங்க முடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

Updated On : 25 மே 2018, 5:15 am IST
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு இ- சேவை மையங்களில் சர்வர் பிரச்னை காரணமாக சான்றிதழ் வழங்க முடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் பொது இ-சேவை மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் வருமானச்சான்று, ஜாதிச்சான்று, இருப்பிடச்சான்று, வில்லங்கச்சான்று, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட 20 சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் மின்னணு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவையும் இங்கு வழங்கப்பட்டு வந்தன. இதற்காக பொதுமக்களிடம் இருந்து சான்றிகழுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த வாரம் முதல் சர்வர் பிரச்னை காரணமாக மாவட்டம் முழுவதும் இ-சேவை மையங்கள் செயல்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெற மற்றும் விண்ணப்பிக்க வருபவர்கள் எந்த வேலையும் நடைபெறததால் அவதிக்குள்ளாயினர். எனவே இ-சேவை மையங்கள் தடையின்றி செயல்பட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments