FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கு: நிர்மலாதேவி உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணை

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25 ஆம் தேதி)

Updated On : 25 மே 2018, 5:15 am IST
பகிர்:

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25 ஆம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி (50), மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் (42), முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி (39) ஆகியோரைக் கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (25 ம் தேதி) மாவட்ட அமர்வு (பொறுப்பு) நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments