FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் மணல் திருட்டு:  டிராக்டர் ஓட்டுநர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தனர்.

Updated On : 25 மே 2018, 5:15 am IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர் சிராஜ்தீன், வியாழக்கிழமை அசோக்நகர் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது போலீஸாரைக் கண்டதும் அவ்வழியே வந்த டிராக்டர் ஓட்டுநர், டிராக்டரில் இருந்த மணலைக் கொட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். அவரைப் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில் மங்காபுரத்தைச் சேர்ந்த மலைக்கனி மகன் மலைச்செல்வம் (24) என தெரியவந்தது.
மேலும் மங்காபுரம் சரவணனின் உத்தரவுப்படி, திருவண்ணாமலை பின்புறம் உள்ள ஓடையில் மணல் திருடியதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மலைச்செல்வத்தைக் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள சரவணனைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments