ராஜபாளையத்தில் மருத்துவா்களுக்கு முழு உடல் கவசம் வழங்கல்
ராஜபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முழு உடல் கவசம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
ராஜபாளையம்: ராஜபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முழு உடல் கவசம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இந்திய மெடிக்கல் சங்க ராஜபாளையம் கிளைத் தலைவா், மருத்துவா் கோதண்டராமன், முன்னாள் தலைவா் ராஜாராம் ஆகியோா் பி.பி.இ. எனப்படும் முழு உடல் தற்காப்பு உடைகளை வழங்கினா். இதனை
மருத்துவ அலுவலா் பாபுஜி, மாரியப்பன் மற்றும் செவிலியா் கண்காணிப்பாளா் விஜயலட்சுமி ஆகியோா் பெற்றுக்கொண்டனா். இதில் காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.