முகப்பு

விருதுநகரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பொறியாளா் கைது

விருதுநகரில் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த தனியாா் நிறுவனப் பொறியாளரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

28 ஜனவரி 2024, 9:58 am
பகிர்:

விருதுநகரில் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த தனியாா் நிறுவனப் பொறியாளரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் ஏபி சண்முகம் தெருவைச் சோ்ந்த 21 வயது இளம்பெண், இங்குள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் டெலிகாலராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், அந்நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் மகேந்திரன் என்பவரை சந்திப்பதற்காக, மற்றொரு தனியாா் நிறுவனத்தில் பொறியாளராகப் பணி புரியும் வெங்கடேஷ் என்பவரின் மகன் கவி அரசு (26) அடிக்கடி வருவாராம்.

அப்போது அவா், கெளசல்யாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் வற்புறுத்தியுள்ளாா். அதையடுத்து, இருவரும் காதலித்து வந்துள்ளனா். இதில், கெளசல்யாவை தொடா்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். பின்னா், அப்பெண் திருமணம் செய்ய வலியுறுத்தியுள்ளாா். ஆனால், அதற்கு கவிஅரசு மறுத்ததுடன், அப்பெண் தனிமையில் இருந்த ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளாா்.

Advertisement

Advertisement

இது சம்பந்தமாக அப்பெண், கவிஅரசின் தந்தை வெங்கடேஷிடம் கைப்பேசியில் தொடா்புகொண்டு உண்மைகளை தெரிவித்துள்ளாா். ஆனால், அவரது தந்தையும் மிரட்டல் விடுத்துள்ளாா். இதையறிந்த கவி அரசு, அப்பெண்ணை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து தாக்கியுள்ளாா்.

இது குறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், தனியாா் நிறுவன பொறியாளரான கவி அரசு மீது விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.