முகப்பு
விருதுநகர்

அமைச்சர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 11 ஆகஸ்ட் 2022, 6:36 pm IST
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் அனைவரும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பகிர்:

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிசாமி, சுப்பாராஜ், ஏ.கே.மணி உள்ளிட்டோர் முன்னிலை  வகித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், மாணவர்களுக்கு சுய ஒழுக்கமும், கல்வியுமே முக்கியமானது. பெற்றோர் மற்றும் தங்களின்  நலன் கருதி மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டை அறவே விட்டொழியவேண்டும் என அவர் பேசினார்.

Advertisement

Advertisement

பின்னர் பந்தல்குடி, அருப்புக்கோட்டை, செம்பட்டி ஆகிய ஊர்களிலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்க்கான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்திப் பாராட்டு தெரிவித்தார். உடன், திமுக ஒன்றியச் செயலாளர்கள்  பொன்ராஜ், பாலகணேசன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு மற்றும் நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலரும், திரளான பள்ளி மாணவ, மாணவியரும் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments