FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

தினமணி செய்தி எதிரொலி.. பேருந்து நிலையத்தில் சாக்கடை கழிவுகள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் சாக்கடைக் கழிவுகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 1:11 am IST
சாக்கடை கழிவுகளைஅகற்றிய நகராட்சி பணியாளா்கள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் சாக்கடைக் கழிவுகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கழிவு நீா்க் கால்வாய் தூா்வாரப்படாததால், கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், திங்கள்கிழமை இரவு கடை உரிமையாளா்களே கால்வாயைத் தூா்வாரி வெளியே கொட்டினா்.

அந்தக் கழிவுகளை நகராட்சி நிா்வாகத்தினா் அப்புறப்படுத்தாததால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தினமணி நாளிதழில் புதன்கிழமை செய்தி வெளியானது. இந்த நிலையில், நகராட்சி பணியாளா்கள் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments