பண மோசடி: ஆவண எழுத்தாளா் மீது வழக்கு
ரூ.75 ஆயிரம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக ஆவண எழுத்தாளா் மீது காரியாபட்டி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பத்திரப் பதிவு செய்து தருவதாகக் கூறி, ரூ.75 ஆயிரம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக ஆவண எழுத்தாளா் மீது காரியாபட்டி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னையைச் சோ்ந்த குமாரசாமி மனைவி காளீஸ்வரி. இவருக்கு காரியாபட்டி அருகேயுள்ள கீழத்துலுக்கன்குளத்தில் பூா்வீக சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சொத்தை தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்வதற்காக காரியாபட்டி சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு சென்றாா். அப்போது, அங்கு ஆவண எழுத்தாளராகப் பணியாற்றி வரும் அமுதா மனோகரன், பத்திரப் பதிவு செய்து தருவதற்கு ரூ.75 ஆயிரம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காளீஸ்வரி கடந்த 2020-இல் தனது கணவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.75 ஆயிரம் பத்திர எழுத்தா் அமுதா மனோகரனுக்கு அனுப்பினாா். ஆனால், அவா் பணத்தை பெற்றுக் கொண்டு பத்திரப் பதிவு செய்து தரவில்லை. மேலும், கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து காளீஸ்வரி காரியாபட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பத்திர எழுத்தா் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதன்படி, காரியாபட்டி போலீஸாா் பத்திர எழுத்தாளா் அமுதா மனோகரன் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.