FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பழனி கோயில் நில மோசடி! பத்திரப் பதிவு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை! முன்னாள் அமைச்சர் சொல்கிறார்!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தது குறித்து...

Updated On : 19 ஜூலை 2026, 2:56 pm IST
திமுக முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி - படம்: தினமணி
பகிர்:

பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில், பத்திரப் பதிவு தெரியாமல் நடைபெற வாய்ப்பே இல்லை என்று திமுக முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை அய்யர் பங்களா பகுதியில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “பழனி கோயிலுக்கு சொந்தமான இடத்தை பத்திரப் பதிவு செய்து நில மோசடி நடந்துள்ளது. இதில் யார் உடந்தையாக இருந்தார்கள் என்பதை பற்றி விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

கோயில்கள் இடத்தை பதிவே செய்ய முடியாது, கோயில் நிலம் , அரசு நிலம், நீர்நிலை, வக்பு இடங்கள் குறித்து பத்திரப் பதிவு அலுவலக ஆவணங்களில் பதிவு செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதேபோன்று, கோயில் நில பத்திரப் பதிவுக்கு முதல்நாளே டோக்கன் போடப்பட்டிருக்கும், எனவே பழனி கோயில் நில பத்திரப் பதிவு தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை.

இது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் நேரடியாக பதில் சொல்லாமல், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பதிவுத் துறையில் முறைகேடு என்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் முறைகேடு குறித்து புகார் வந்திருந்தால், அப்போதே அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும்.

589 பத்திரப் பதிவு அலுவலகத்தில் நான் எனது ஆட்களைப் போட்டதாக கூறுகின்றார்; பொறுப்புள்ள அமைச்சர் இதுபோன்று பொதுவாக பேசக்கூடாது.

சட்டத் துறையில் வழக்குரைஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறுவதாக அவரது கட்சியை சேர்ந்தவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.

நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்திப்பதே வேலையாக பார்த்துவருகிறார், முதலமைச்சர்போல, நிழல் முதலமைச்சராக நிர்மல்குமார் செயல்படுகிறார், அனைத்து துறைகளுக்கும் பதிலளிக்கிறார்.

அறநிலையத்துறை இடத்தை பதிவு செய்ய முடியாது, ஆனால் எப்படி பதிவு செய்தனர், குறிப்பாக ஒரு பதிவாளரை இடமாற்றி பதிவு செய்துள்ளனர்.

என் மீதான குற்றச்சாட்டை ஆதாரத்தோடு சொல்லுங்கள்” என்றார்.

மேலும் கூறுகையில், “ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்சம் இருக்காது என்றனர், 60 பத்திரப் பதிவு அலுவலகங்களில் சோதனை நடத்தி 37 லட்சம் கைப்பற்றினார்கள். நகராட்சி அலுவலகங்களில் 31 லட்சம் கைப்பற்றினார்கள். அதற்கு என்ன பதில், இதற்கு யார் பொறுப்பாவது?”

கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப் பதிவுத் துறையில் தவறு நடந்திருந்தால், மேலதிகாரிகளே உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவிடுவார்கள். எல்லா ஆட்சிகாலத்திலும் ஒரே அதிகாரிகள்தான் பணியில் உள்ளனர்.

589 பத்திரப் பதிவு அலுவலகங்களில் எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள் எனவும், என் மூலமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை அமைச்சர் நிர்மல்குமார் கூற வேண்டும்

நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்புகளை அமைச்சர் தீர்மானிக்க முடியாது , அதிகாரிகள்தான் முடிவெடுப்பார்கள்” என்றார்.

summary

Former DMK Minister for Registration Moorthy has stated that there is absolutely no possibility for the land registration regarding the Palani temple land fraud case to have taken place without the knowledge of the Registration Department.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments