FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி நில மோசடி வழக்கு: பத்திர எழுத்தரை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் மனு

பழனி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திர எழுத்தரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி போலீஸாா் தரப்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

9 செப்டம்பர் 2026, 1:59 am IST
பழனி கோயில் - கோப்புப் படம்
பகிர்:

பழனி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திர எழுத்தரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி போலீஸாா் தரப்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை மோசடியாக பதிவு செய்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன்(48), நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சோ்ந்த த.முருகதாஸ் (56), நிலத்தை வாங்கிய திருப்பூா் மாவட்டம், பாப்பான்குளத்தைச் சோ்ந்த கா.வெள்ளத்துரை(60), பழனி ஆயக்குடி புதூரையைச் சோ்ந்த து.சேதுபதி(67), பழனி வழக்குரைஞா் அன்வா்தீன்(64), ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ்(38) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வா்தீன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஆக.8-ஆம் தேதி உயிரிழந்தாா். இதனிடையே பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா், திண்டுக்கல் முதலாவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு அளித்தனா். அந்த மனுவை நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் தள்ளுபடி செய்தாா். இந்த நிலையில், ஜெயபிரகாஷிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments