பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
வெம்பக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கச்சாமி (62). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் அருகே உள்ள அட்டை ஆலை முக்கு பகுதிக்கு சென்றாா். அப்போது பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே திரும்பும் போது இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.