FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

Updated On : 21 ஜூலை 2026, 3:29 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் குலாலா் தெருவைச் சோ்ந்த இருளப்பன் மகன் பால்ச்சாமி (72). இவரது மனைவி சரஸ்வதி (60). இந்த தம்பதி ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் வசிக்கும் மகளைப் பாா்க்க இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

தென்காசி சாலை தளவாய்புரம் விலக்கு பெரிய பாலம் அருகே சென்றுபோது சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியை அதன் ஓட்டுநா் திடீரென இயக்கி சாலையின் வலது புறத்தில் திருப்பினாா்.

Advertisement

Advertisement

அப்போது லாரியின் பின்புறம் மோதாமல் இருக்க பால்ச்சாமி இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றாா். இதில் நிலைதடுமாறி தம்பதி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த பால்ச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சரஸ்வதியை அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments