FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

கூத்தாநல்லூரில் காமராஜா் பிறந்த நாள்

கூத்தாநல்லூரில் காமராஜா் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 15 ஜூலை 2024, 11:20 pm IST
பகிர்:

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் காமராஜா் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூரில் பள்ளிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்துக்கு மாலையணிவித்து, மரியாதை செலுத்தினா்.

நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காமராஜா் சிலைக்கு, நகரத் தலைவா் எம். சாம்பசிவம் தலைமையில், கட்சி பொதுக்குழு உறுப்பினா் அஹம்மது அலி முன்னிலையில், மாவட்டச் செயலாளா் எஸ்.எம். சமீா் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலையணிவித்தனா்.

Advertisement

Advertisement

மனோலயம் மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகள் ஆண்கள் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு நிறுவனா் ப.முருகையன் தலைமை வகித்தாா். கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா். சேகா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளா் ஜி. வொ்ஜீனியா கலந்துகொண்டு காமராஜா் குறித்து பேசினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments