FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

திருநள்ளாறு அருகே தேனூர்அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400 மாணவர்களுக்கு பேரிடர்  மேலாண்மை பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 5:55 am IST
பகிர்:

திருநள்ளாறு அருகே தேனூர்அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400 மாணவர்களுக்கு பேரிடர்  மேலாண்மை பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில்  உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், பேரிடர் மேலாண்மை காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநள்ளாறு பகுதி தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400 மாணவர்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தொடங்கி வைத்துப் பேசியது:
புயல், வெள்ளம், நில அதிர்வு போன்ற பேரிடர் காலத்தில், அவற்றை எதிர்கொள்ளும் திறனை ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இவ்வாறான திறனை இளம் வயதிலேயே பெற்றிருக்கும் வகையில், இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் முழு விவரங்களையும் மாணவர்கள் அறிந்துகொள்ள ஆர்வம் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ளும் வல்லமை நமக்கு ஏற்படும். நம்மால் பிறரை எளிதாக காப்பாற்றவும் முடியும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் இந்த நுணுக்கத்தை அறிந்திருப்பது நல்லது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், தொழிற்சாலைகள் துறை ஆய்வாளர் செந்தில்வேலன்,  துணை வட்டாட்சியர் நம்பூதிரி மணிகண்டன், பள்ளி முதல்வர் கேசவ், துணை முதல்வர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments