FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

ஆசிரியரும் பெற்றோரும் கூட்டணியாகச் செயல்பட வேண்டும்: மாணவர் தின விழாவில் அமைச்சர் பேச்சு

ஆசிரியரும் பெற்றோரும் கூட்டணியாகச் செயல்பட வேண்டும் என  காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாணவர் தின விழாவில் அமைச்சர் பேசினார்.   

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 5:55 am IST
பகிர்:

ஆசிரியரும் பெற்றோரும் கூட்டணியாகச் செயல்பட வேண்டும் என  காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாணவர் தின விழாவில் அமைச்சர் பேசினார்.   
புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் விழாவில்  பேசியது :  காரைக்காலில் கல்வித்துறை அதிகாரியின் முயற்சியால் பல முன்னேற்றத்தை கல்வித்துறை கண்டுவருகிறது. கடந்த கல்வியாண்டில் காரைக்காலில் தேர்ச்சி வீதம் அதிகரித்திருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு. அகில இந்திய அளவில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் மாணவர் சேர்க்கை குறையாமல் தடுக்கப்பட்டுள்ளது. 
புதுச்சேரி அரசு கல்வித்துறைக்காக நிகழாண்டு ரூ.841 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, அரசுப் பள்ளியில் படிக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், கல்வியில் மேம்படவேண்டும்.
பெற்றோர்கள் அனைவரும், தமது குழந்தை பள்ளியில் எவ்வாறு படிக்கிறார்கள் என்பதை பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களைச் சந்தித்து கேட்டறிய வேண்டும். மேலும், ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருகிறார்களா, குழந்தைகள் மீது அக்கறை செலுத்துகிறார்களா என்பது குறித்தும் பெற்றோர் கவனம் செலுத்தவேண்டும். தற்போதைய சமூக சூழலால் மாணவர்கள் பெரிதும் பாதிக்க நேரிடுகிறது. 8-ஆம் வகுப்பு வரை நமது குழந்தை சரியான கல்வியை கற்கவில்லை என பெற்றோருக்குத் தெரியவந்தால், பள்ளித் தலைமையாசிரியர் அறைக்கு குழந்தையுடன் செல்லவேண்டும். யாரிடம் குறை உள்ளது எனக் கேட்டு தெளிவுபடுத்தவேண்டும். ஆசிரியர், பெற்றோர் கூட்டணியாக செயல்பட்டால் மாணவரை நல்ல நிலைக்கு கொண்டுவரமுடியும்.  ஆசிரியர்களைப் பொருத்தவரை அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. நம்மிடம் பயிலும் மாணவரை தகுதியானவர்களாக கொண்டுவர, இதுவரை எடுக்கும் முயற்சியைக் காட்டிலும் கூடுதலாக ஆசிரியர்கள் செய்யவேண்டும் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, முதன்மைக் கல்வி அலுவலர் அ.அல்லி, கல்வித்துறை வட்ட துணை ஆய்வாளர்கள் பொன்.சௌந்தரராசு, எஸ்.கார்த்திகேசன் உள்ளிட்டோர் பேசினர்.  பள்ளி தலைமையாசிரியர் ஏ.பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments