காரைக்கால் மருத்துவமனையில் ஆக.4-இல் மருத்துவ முகாம்
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வரும் 4-ஆம் தேதி இருதயவியல், நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வரும் 4-ஆம் தேதி இருதயவியல், நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் மாதமிரு முறை நடைபெறும் முகாமாக, வரும் 4-ஆம் தேதி சனிக்கிழமை இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.